Notice November - 12 - 2016

பாராட்டுவிழா பரந்தன் இந்து மகாவித்தியாலயத்தில், திறமையாளர்களைத் தேடிப்பாராட்டுவோம் புதிய திறமையாளர்கள் உருவாக வழி சமைப்போம். போர்ச்சூழலால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு பகுதியில் மிகவும் பாதிக்கப்பட்டு காலுக்கு செருப்புக்கூட இல்லாமல் புழுதி படிந்த கால்களுடன் பாடசாலை சென்று கொலசிப் பரீட்சைக்கு தோற்றியவர்களையும் அகில இலங்கை ரீதியாக தமிழ் பேச்சு கட்டுரை கணிதப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களையும் பரிசளித்து ஊக்குவிக்க வேண்டுமென்று நாம் எடுத்த முயற்சியின் விளைவாக கிளிநொச்சி பரந்தன் இந்து மகாவித்தியாலத்தியாலயத்தில் கொலசிப் பரீட்சைக்கு தோற்றியவர்களையும் கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் அகில இலங்கை ரீதியாக தமிழ் பேச்சு கட்டுரை கணிதப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களையும் பணப்பரிசும் வெற்றிப்பதக்கமும் சான்றிதழும் வழங்கி கௌரவிக்க இருக்கின்றோம் இவ் நிகழ்வு 15.11.2016 அன்று பரந்தன் இந்து மகாவித்தியாலத்தில் நடை பெற இருக்கிறது இந்த நிகழ்வை பொறுப்பேற்றுள்ளார் சுவிஸ் நாட்டில் வசிக்கும் எம் அருமை உறவு அவர்கள் . https://www.facebook.com/uthavumuravukal/