News December - 21 - 2020
மார்கழிப்பூக்கள் 2020 நெதர்லாந்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக பரந்தன் பிரதேச மாணவர்களின் கல்வி தேவைகளுக்கு நிதி மற்றும் கிராம அபிவிருத்தி, சமுகவிழிப்புணர்வுகளுக்கு ஆதாரமாக உருவாக்கி திரு.திருமதி. சாள்ஸ் குணநாயகம் அவர்களால் நடாத்தப்பட்ட அரங்காடல் நிகழ்வு இது. நெதர்லாந்து வாழ் சமூக நலன் விரும்பிகளினதும் பரந்தன் மக்களினதும் பேராதரவுடன் ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நடைபெற்ற அரங்காடலில் பல் வேறு நாடுகளில் இருந்தும் பரந்தன் பழைய மாணவர்கள் வருகைதந்து ஒத்துழைப்பு வழங்கினர். சிறப்பான பல கலைஞர்களின் அரங்காற்றுகைகள் மேலும் மெருகூட்டின. இவ்வருடம் உலகம் பரந்த நோய் தொற்றின் காரணமாக எம் ஒழுங்கமைப்பை தடுத்து மேடை நிகழ்வாக நடாத்த முடியாதபடி முடக்கிப்போட்டுவிட்டது. ஆயினும் எந்த தடைகளுமின்றி அரங்கேறி வந்த இந்நிகழ்வானது இவ்வருடமும் இணைய வழி வாய்ப்புகளைப் பயன்படுத்தி எமது தொழில்நுட்ப பிரிவினரின் ஆலோசனைப்படி ZOOM வழித்தடம் ஊடாக உங்கள் இல்லங்களுக்கு கொண்டு வருகின்றோம். நாம் மாணவர்களின் கல்வியிலும் கிராம அபிவிருத்தியிலும் திட்டமிட்ட பல்வேறு பணிகளை முழுமனதோடு ஆற்றி வருகின்றோம். பரந்தன் மண்ணுக்கான தேவைகள் அதிகம்தான் என்றாலும் நாம் எல்லோரும் இணைந்து செயற்பட்டால் எல்லாவற்றையும் சாதித்து காட்ட முடியும் என எண்ணுகின்றோம். இவற்றை நினைவிருத்தி இந்நிகழ்வை அனைத்துலக பரந்தன் உறவுகளும் கண்டுகளித்து வெற்றிபெறச்செய்யுங்கள் . ———————————- உங்கள் அன்பளிப்புக்கள் கீழ்க்காணும் லிங்க் ஊடாக ஏற்றுக்கொள்ளப்படும். Bank Name -HSBC BANK Account Name- International Association of Paranthan HMV O S Account Number-81501496 Sort code - 40 42 28 SWIFT- HBUKGB4B IBAN-GB19HBUK40422881501496 OR www.paranthanosia.com