இத்திட்டமானது,முதற் கட்டமாக எமது பாடசாலை வளாகத்தையும் வகுப்பறைகளையும் சுத்தமாக வைத்திருத்தல்,பாடசாலை வளாகத்திலும் வகுப்பறைகளிலும் குப்பைக்கூடைகள் வைப்பதன் மூலம் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் குப்பைகளைக் குப்பைக்கூடைகளில் போடும் பழக்கத்தை ஏற்படுத்தி இயற்கையைக் காப்பதோடு பாடசாலையையும் சுத்தமாக வைத்திருத்தல்.
இத்தோடு நில்லாது இத்திட்டத்தை எம் கிராமத்துக்கும் விரிவடையச்செய்வதன் மூலம் எம் மக்களின் வாழ்விடங்ளையும் மற்றும் வீதிகளையும் எந்த கழிவுகளோ குப்பைகளோ இன்றி தூய்மையாக வைத்திருத்தல்.