உதவியும் ஊக்குவிப்பும்...!Posted on: 2016-10-20
உதவி...!
இத்திட்டத்தின் கீழ் உதவிபெறுவோர்  எங்கள் பாடசாலையில் கல்வி பயிலுகின்ற மாணவர்களாகவோஅல்லது பழையமாணவர்களாகவோ இருத்தல் வேண்டும்.அவர்கள் மாணவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களின் பெற்றோர் ஏதாயினும் கொடிய நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பார்களாயின் அவர்களுக்கு உதவ வேறு யாரும் இல்லை என்கின்ற உண்மைநிலை சரியாகக் கண்டறியப்பட்டபின் அவர்களுக்கு உதவிகள் வழங்கப்படும். இதேபோல் எம் பாடசாலையின் பழையமாணவர்களின் பிள்ளைகளும் இவ்வாறு பாதிப்புகளுக்கு உட்பட்டிருந்தாலும் மேற்குறிப்பிட்டவாறு உண்மைநிலை ஆராயப்பட்டு  இத்திட்டத்தின்முலம் எம்மால் முடிந்த உதவிகள் வழங்கப்படும்.


ஊக்குவிப்பு...!
எங்கள் மாணவச் செல்வங்கள் அவர்களின் கல்வித் தரங்களில் சிறப்புச் சித்தி எய்துவாராயின்அவர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு அவர்கள் பெற்ற பெறுபேறுகளுக்கமைய  அவர்களுக்கான  உதவித் தொகையை அவர்களின் சேமிப்புக் கணக்கில் வைப்பிட்டு அவர்களை தொடர்ந்தும் கல்வி பயில  ஊக்குவிக்கும் திட்டமே....இவ் ஊக்குவிப்புத்திட்டம் ஆகும்.

Project Value : 50000.00
Project Start : 2016-05-05
Project End : 2017-05-05