இன்றே மரங்களை நடுவோம் இப்புவிதனை என்றும் வாழவைப்போம்.
அன்று நாங்கள் வாழ்ந்த காலத்தில் எங்கள் ஊர் பச்சை பசேலென பசுமையாக இருந்தது இன்று எங்கள் ஊர் வறண்டு ஓர் பாலைவனம்போல் காட்சியளிக்கிறது என எம் உறவுகள் பலபேர் ஆதங்கப்பட்டார்கள் அவர்களின் ஆதங்கம் நியாயமானது ,இதை நாம் எப்படி நிவர்த்தி செய்யலாம் என நாங்கள் சிந்தித்தபோது உதித்த திட்டம்தான் இந்தப் 'பசுமைத்திட்டம்' இத் திட்டமானது நிழல்தரும் மரங்களை நாட்டி பராமரித்து வளர்ப்பது இத்திட்டத்திற்கு உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பு மிக முக்கியமானது. அன்புறவுகளே......இத்திட்டத்தினைச் செயற்படுத்த பல புலத்துறவுகள் முன்வந்துள்ளார்கள் ,அதேபோல் நிலத்துறவுகள் நீங்ளும் எங்களோடு இணைந்து இத்திட்டத்திற்கு ஒத்துழைத்தால் எங்கள் ஊர் மீண்டும் பசுமைபெறும்.
எம் சந்ததிக்காய் விட்டுச்செல்ல எங்களிடம் ஏதுமில்லை ஆயினும் பசுமையை ஏற்படுத்திச் செல்வோம் நாளைய எம் சந்ததிக்காய்...!