கல்வியில் பின்தங்கிய மாணவர்களை கல்வியால் முன்னேற்றுவதற்கான செயற்திட்டம் தான் இம்மாலைநேரவகுப்புகள்.
இத்திட்டமானது பரந்தன் பழைய மாணவர் சர்வதேச ஒன்றியத்தினால் நடாத்தப்படுகின்ற மிக முக்கியமான செயல்திட்டங்களில் இதுவும் ஒன்று. இதில் ஐந்தாம் தரத்திலும், க.பொ.சா, தரத்திலும் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மேலதிக கல்வியை வழங்கி ,எம்மாணவர்களும் கல்வியால் உயர்ந்து பரீட்சைகளில் சிறப்பு சித்தியெய்தி எம் பாடசாலைக்கும் புகழ் சேர்க்கும் நோக்குடன் இத்திட்டமானது செயற்பட்டு வருகின்றது.
இம் மாலைநேர வகுப்புகளுக்கான செலவுகளை பல நலன் விரும்பிகள் வழங்கும் நன்கொடை மூலமும்,மற்றும் இச் சங்கத்தின் அங்கத்துவப்பணத்தின் மூலமும் வழங்கபட்டு வருகிறது.