எமது இளைஞர் வட்ட வீர வீராங்கனைகள் வெற்றி பெற...!Posted on: 2016-10-18

நிறைவான வளர்ச்சி என்பது சகல துறைகளிளும் வளர்ச்சி பெறுவதே.அந்த வகையில் கல்வி என்பது முதல்நிலை பெறுவதால் அதில் அதிக கவனத்தை செலுத்தும் பரந்தன் பழைய மாணவர் சர்வதேச ஒன்றியமும் பரந்தன் இந்து மகாவித்தியாலய பழையமாணவர் சங்கமும் இணைந்து அதன் அடுத்த கட்ட வளர்ச்சியாக இருக்க கூடிய விளையாட்டினை ஊக்கப்படுத்தும் முகமாக முன்னேறி வரும் எமது இளைஞர் வட்ட வீர வீராங்கனைகள் மென்மேலும் வெற்றிகள்பெற ஆண்கள் அணிக்கு கால்பந்துகளும் பெண்கள் அணிக்கு விளையாட்டு உடைகளும் வழங்கப்பட்டது. இதனை பரந்தன் இளைஞர் வட்ட மூத்த உறுப்பினர் திரு கோ. சந்திரசேகரம் மற்றும் திரு நாகேந்திரம் ஆகியேர் ஊடாக வழங்கப்பட அதனை இளைஞர் வட்ட உறுப்பினர் திரு வி.ரவீந்திரன் பெற்றுக்கொண்டார்.

எமது இளைஞர்வட்டம் மென்மேலும் வளர்ந்து.எமது இளையோர்களை ஊக்கம் உடையவர்களாக ஊக்கிவித்து எமது கிராமத்தை கட்டி எழுப்புவோம்.

Event Date : 2016-10-11